திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து காவலர்களே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குற்றங்களைத் தடுப்பதற்காக மாவட்ட அளவில் எஸ்.பி தலைமையிலும், மாநகர அளவில் துணை ஆணையர் தலைமையில் தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தனிப்படை போலீசார் மீது தான் தற்போது பரபரப்புக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

Advertisment

tt

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியிலுள்ள தோப்புகளில், லட்சக்கணக்கில் பணத்தை வைத்து சூதாட்டம் நடப்பதாக லால்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் அடிப்படையில் எஸ்.ஐ. தலைமையில் சோதனையில் ஈடுபட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 3 இரு சக்கர வாகனங்கள், 2 கார்கள், 3 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க வழக்கறிஞர்கள் வந்தபோது, குற்றவாளிகள் மீதான எஃப்.ஐ.ஆரில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஒரு கைக்கடிகாரமும், 2 லட்சம் ரொக்கமும் குறிப்பிடப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து லால்குடி ஆய்வாளர், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. வினோத்திடம் விசாரணை நடத்தியதில், வாட்சையும், 2 லட்சம் ரூபாயையும் அவர் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்.ஐ.யிடமிருந்த வாட்சை உரியவர்களிடம் ஆய்வாளர் ஒப்படைத்தார். 2 லட்சம் பணத்தை விரைவில் திருப்பித் தருவார் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அந்த எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

மற்றொரு சம்பவத்தில், திருச்சி கண்டோன்மெண்ட் பாலியல் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 7 பேரை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக ஆயதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

tr

Advertisment

சமீபத்தில் ஏர்போர்ட் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் புரோக்கர்கள் பயன்படுத்திய குறிப்பு போலீசாரிடம் சிக்கியதில், போலீசார் சிலருக்கு மாதம் தவறாமல் கொடுத்துவந்த மாமூல் விவரங்களும் அதிலிருந்த தாகக் கூறப்படுகிறது. அதில், டி.சி. செல்வ குமார் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் தனிப்படை போலீசார் இனுஸ்டீன், பிரதீப் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு, அவர்களுக்கு இரண்டாயிரம் கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது.

இது காவல் ஆணையர் வரை தெரியவந்ததால், விசாரணை நடத்துவதற்கு அந்த உயரதிகாரி முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கூண்டோடு 7 பேரையும் ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரைப் பொறுத்தவரை, திருச்சி மாநகரின் பெரும்பகுதி, துணை ஆணையர் (தெற்கு) செல்வகுமார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏர்போர்ட் விபச்சார வழக்கில் தொடர்பிலிருந்த போலீசாரில் ஒருவரை மட்டும் காப்பாற்றுவதற் காக இவர் தொடர்ந்து முயற்சி செய்ததாகத் தெரியவந்ததில், அந்த போலீஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

Advertisment

tr

மாநகர விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸ் ஒருவர், விபச்சார கும்பலுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்து, அவரை செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சி மாநகரில் வடக்கு டி.சி.யான விவேகானந்தா சுக்லா பெரிதும் ஆக்டிவாக இல்லையென்றும், மதியம் 12 மணிக்கு மேல் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது என்று குற்றச்சாட்டு வாசிக் கிறார்கள்.

மாநகரில் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக காவல்துறை ஆணையர் தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்தாலும், இரண்டு துணை ஆணையர்களும் சரியாகப் பணியாற்றுவ தில்லை. ஒருவர் வசூலில் மட்டும் கவனம் செலுத்துகிறார். மற்றொருவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் தங்கியிருக்கும் அறையை விட்டு வெளியே வருவதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, காவல்துறை இயக்குநர் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.